உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆன்மிக நகரம் ராமேஸ்வரத்தில் குப்பை குவியல்! துாய்மை ஒப்பந்தப்பணி முடிந்தது

ஆன்மிக நகரம் ராமேஸ்வரத்தில் குப்பை குவியல்! துாய்மை ஒப்பந்தப்பணி முடிந்தது

ராமேஸ்வரம்; ஆன்மிக நகரமான ராமேஸ்வரம் நகராட்சியில் துாய்மைப் பணியாளர்கள் ஒப்பந்தம் முடிவடைந்ததால் தெருவெங்கும் குப்பை குவிந்து நோய் பரவும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரம் நகராட்சியில் 20 துாய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களால் கோயில் ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரையில் கிடக்கும் கழிவுத் துணிகள், குப்பை மற்றும் நகராட்சி தெருக்களில் கிடக்கும் குப்பையை தினசரி சேகரிக்க முடியாமல் போனது.இதனை தவிர்க்க கடந்த 5 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் 110 ஊழியர்களை நகராட்சி நிர்வாகம் நியமித்தது.இந்த ஊழியர்களின் ஒப்பந்தம் ஜன.,10ல் முடிவடைந்தது. இந்த ஒப்பந்த முறையை புதுப்பிக்க நகராட்சி அக்கறை காட்டவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் ரத வீதி, தெருக்களில் குப்பை தேங்கி மலைபோல் குவிந்தது. இதனை நகராட்சி ஊழியர்களால் முழுமையாக அள்ள முடியாமல் திணறினார்கள். இதனால் தெருவெங்கும் தேங்கிய குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு மக்களுக்கு மர்ம காய்ச்சல், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கண்ணன் கூறுகையில், துப்புரவு ஒப்பந்த முறை முடிவடைந்ததால் பழுதான குப்பை அள்ளும் லாரிகளை பழுது நீக்கி பிப்., க்குள் ஒப்படைக்க உள்ளனர். மேலும் துப்புரவு பணிக்கு விரைவில் டெண்டர் விடப்படும். தற்போது நகர் முழுவதும் குப்பை சேகரித்து, சுகாதாரம் பராமரிக்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ராமேஸ்வரன்
பிப் 20, 2025 17:12

அப்படியே விட்டுருங்க. அடுத்த வாரம் பிரதமர் வர்ராராம். சுத்தமாயிடும். ஒரே ஒரு குப்பை மட்டும் விட்டு வெச்சுருப்பாங்க.


சமீபத்திய செய்தி