உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி ஜீவா நகரில் குவிந்துள்ள குப்பை: சுகாதாரம் கேள்விக்குறி

பரமக்குடி ஜீவா நகரில் குவிந்துள்ள குப்பை: சுகாதாரம் கேள்விக்குறி

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி ஜீவா நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள குப்பை பிரிக்கும் இடம் அருகில் சுகாதாரக்கேடான சூழலில் குப்பை கொட்டியுள்ளனர்.பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவா நகர் பகுதியில் குப்பை பிரிக்கும் மையம் செயல்படுகிறது. ஜீவா நகர் வள மீட்பு மையம் என்ற பெயரில் அப்பகுதியில் அள்ளப்படும் குப்பை அனைத்தும் இங்கு பிரிக்கப்படுகிறது.எமனேஸ்வரம் சர்வீஸ் ரோட்டை ஒட்டி வைகை ஆறு பகுதியில் இந்த மையம் உள்ளது. தொடர்ந்து குப்பை அனைத்தும் பிரிக்கப்படாமல் ஒட்டுமொத்தமாக வைகை ஆறு மற்றும் கரைகளில் மலை போல் குவித்துள்ளனர். இதனால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் பன்றிகளின் மேய்ச்சல் இடமாக மாறி வருகிறது. அருகில் மயானம் இருக்கும் நிலையில் குடியிருப்புகளும் பெருகி உள்ளன.இந்த வழியாக சர்வீஸ் ரோட்டில் வாகன ஓட்டிகள் உட்பட பள்ளி மாணவர்கள் செல்லும் நிலையில் துர்நாற்றத்தால் மூச்சு திணறல் ஏற்படுகிறது.எனவே ஜீவா நகர் குப்பை பிரிக்கும் மையத்தில் நகராட்சி அதிகாரிகள் குப்பையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை