மேலும் செய்திகள்
ராமேஸ்வரத்திற்கு பெர்மிட் கோரி பாம்பனில் மறியல்
4 minutes ago
வண்ண வில்
8 minutes ago
வானவில் மன்ற போட்டிகள்
18 minutes ago
கூட்டுறவு வாரவிழா விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
21 minutes ago
கமுதி: கமுதி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கு நிரம்பியதால் கொட்ட முடியாமல் குப்பை அள்ளி சென்ற வாகனங்கள் வெளியில் நிறுத்தப்பட்டதால் துர்நாற்றத்தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது.இங்கு வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் குப்பையை தினந்தோறும் துாய்மை பணியாளர்கள் கொண்டு செல்கின்றனர். இதற்காக கமுதி பேரூராட்சியில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினந்தோறும் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சேகரிக்கப்படும் குப்பையை கமுதி குண்டாறு கரையோரத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இடத்தில் கொட்டி அங்கு மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் குப்பை குவிக்கும் இடத்தில் முழுமையாக நிரம்பியுள்ளதால் அங்கு கொட்ட முடியாமல் பணியாளர்கள் சிரமப்பட்டனர். நேற்று துாய்மை பணியாளர்கள் கொண்டு சென்ற குப்பையை கொட்ட முடியாமல் தனியார் பள்ளி பின்புறம் வாகனங்களை வரிசையாக நிறுத்தியுள்ளனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது பள்ளி நடப்பதால் மாணவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை தனியாக கொட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்படாமல் இருப்பதால் குறுகிய இடத்தில் கொட்டப்படுவதால் விரைவில் நிரம்புகிறது. இதே நிலை தொடர்ந்தால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் குப்பை தேங்கும் நிலை உருவாகும். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் கமுதி பேரூராட்சிக்கு நிரந்தரமாக குப்பை கொட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட வேண்டும். பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாற்று இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தற்காலிக இடத்தில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் குப்பை முறையாக கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
4 minutes ago
8 minutes ago
18 minutes ago
21 minutes ago