உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மாநில ஹாக்கி போட்டியில் தங்கம்

 மாநில ஹாக்கி போட்டியில் தங்கம்

ராமநாதபுரம்: மாநில அளவிலான தமிழ்நாடு பள்ளி ஹாக்கி லீக் போட்டிகள் நவ.,12ல் திருச்சியில் நடைபெற்றது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் அரியலுார் அணியுடன் மோதி 5-2 கோல் கணக்கில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் விளையாட்டு விடுதி மாணவர்கள் தங்கப்பதக்கம், கோப்பையை வென்றனர். மாணவர்கள், பயிற்சியாளர் மணிகண்டன் ஆகியோர் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் இஜாஸ் அப்துல்லா, தலைமையாசிரியர் ஹாஜா முகைதீன், ஹாக்கி சங்க செயலாளர் கிழவன் சேதுபதி உடற்கல்வி இயக்குநர் தாமரைக்கண்ணன் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்