உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இந்தியாவில் இருந்து கடத்தப்படும் பொருட்கள் இலங்கையில் சிக்குவது தொடர்கிறது

இந்தியாவில் இருந்து கடத்தப்படும் பொருட்கள் இலங்கையில் சிக்குவது தொடர்கிறது

ராமநாதபுரம்:-இந்தியாவில் இருந்து கடத்தப்படும் கஞ்சா, சமையல் மஞ்சள், பீடி இலை, போதை பொருட்கள், போதை மாத்திரைகள் அனைத்தும் இலங்கையில்தான் அதிகளவில் பிடிபடுகிறது.இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குறிப்பாக தமிழக கடற்கரைப் பகுதிகளில் இருந்துபொருட்கள் அதிகளவில் கடத்தி செல்லப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து மிக அருகில் இலங்கை இருப்பதால் கடத்தல்காரர்களின் சொர்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் உள்ளது.இங்கிருந்து இலங்கைக்கு கடத்தப்படும் அனைத்து பொருட்களையும் இலங்கை சர்வதேச கடல் எல்லைப்பகுதியாக இருப்பதால் எளிதில் வெளி நாடுகளுக்கு கடத்தி செல்ல முடிகிறது.இதன் காரணமாக ராமேஸ்வரம் புறநகர் கடற்கரை கிராமங்களில் இருந்து கஞ்சா, போதைப்பவுடர், பீடி இலை, சமையல் மஞ்சள், ஏலக்காய், போதை மாத்திரைகள் அதிகமாக கடத்தப்படுகின்றன.இந்திய கடற்படை, கடலோர காவல் படை, மரைன் போலீசார், சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர், கியூபிரிவு என பல்வேறு துறைகள் இருந்தும் இந்திய கடற்பகுதியில் இருந்து கடத்தப்படும் பொருட்கள் இந்திய, தமிழக அதிகாரிகளிடமோ சிக்குவதில்லை.சமீப காலமாக இலங்கைகடற்படையினர் தான் இது போன்ற கடத்தல் பொருட்களை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். எனவே இந்திய, தமிழக அதிகாரிகள் கண்காணிப்பை அதிகப்படுத்தி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை