மேலும் செய்திகள்
அரசு கல்லுாரி ஆண்டு விழா
29-Mar-2025
பரமக்குடி: பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த 24ம் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழாவில் 652 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். இங்கு 2600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிகின்றனர். 467 பேருக்கு இளங்கலை, 185 பேருக்கு முதுகலை பட்டங்களை அழகப்பா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் ஜோதிபாசு வழங்கி பேசினார்.அப்போது இந்தியாவின் தலைசிறந்த பல்கலையாக அழகப்பா பல்கலை உள்ளது. நீங்கள் சமூகத்தின் பாதுகாப்பிற்கு சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும். நம்பிக்கையுடனும், லட்சியத்துடனும் செயல்பட வேண்டும் என்றார்.தொடர்ந்து 28-வது நுண்கலை, விளையாட்டு, மாணவர் பேரவை மற்றும் கல்லுாரி ஆண்டு விழா நடந்தது. தமிழ் துறை தலைவர் மணிமாறன் வரவேற்றார். மாணவர் பேரவை தலைவர் திலகவதி, செயலாளர்கள் தேவதர்ஷினி, கவுதம், மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் ஆண்டறிக்கை, இளைஞர் நலம் மற்றும் நுண்கலை ஆண்டறிக்கையை வணிகவியல் துறை தலைவர் கண்ணன், உடற்கல்வித்துறை ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் பிரசாத் வாசித்தனர்.பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், மதுரை மத்திய சிறை துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மாணவர்களுக்கு பரிசளித்து பேசினர். மாணவர் பேரவை துணைத் தலைவர் அறிவழகன் நன்றி கூறினார்.
29-Mar-2025