உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப் பள்ளி ஆண்டு விழா

அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் அருள் சேகரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் செந்தாமரை, துணைத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும், கட்டுரை, கவிதை போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு வரலாற்று காப்பிய நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.உதவி ஆசிரியர் பகவதியம்மாள், எஸ்.எம்.சி., தலைவி நந்தினி, துணைத் தலைவர் சுதா, கிராம தலைவர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை