உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ரோட்டில் கிடந்த 5 பவுன் செயினை ஒப்படைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் நேர்மைக்கு எப்போதும் பாராட்டு

 ரோட்டில் கிடந்த 5 பவுன் செயினை ஒப்படைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் நேர்மைக்கு எப்போதும் பாராட்டு

சாயல்குடி: சாயல்குடியில் ரோட்டில் கிடந்த 5 பவுன் தங்க செயினை போலீசில் ஒப்படைத்த மாணவர்களின் நேர்மையை அனைவரும் பாராட்டினர். சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவர்கள் வீரபாண்டி, சந்தோஷ், மகாராஜன் மூவரும் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாலை 5:00 மணிக்கு மக்கள் நெரிசல் மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றனர். அப்போது கீழே கிடந்த 5 பவுன் தங்கச்செயினை கண்டனர். அதை சாயல்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் பாராட்டிய போலீசார் நாளை காலை பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில் வந்து சந்திப்பதாக சொல்லிவிட்டு சென்றனர். அதன்படி நேற்று காலை பள்ளியில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் பிற ஆசிரியர்கள் சாயல்குடி இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்ட போலீசார் மூன்று மாணவர்களுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து அவர்களின் நேர்மையை மற்ற மாணவர்களுக்கு பாராட்டி விளக்கி கூறினர். மாணவர்கள் மூவரும் கூறுகையில், பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதை உணர்ந்து கடைசி வரை நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே இந்த செயலை செய்துள்ளோம். இதன் மூலம் நாங்கள் படித்த பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர். மாணவர்கள் கண்டெடுத்த 5 பவுன் தங்கச் செயின் சாயல்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்னாராது என்று அறியப்படாத நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் நகை வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை