மேலும் செய்திகள்
அரசு போக்குவரத்து கழகத்தில் சமத்துவ பொங்கல்
18-Jan-2025
ராமநாதபுரம்,:அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சார்பில் 15வது ஊதியக்குழு பேச்சு வார்த்தை துவக்க வலியுறுத்தி ஜன.,22ல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.சி.ஐ.டி.யு., காரைக்குடி மண்டல பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன் கூறியதாவது: தினமும் 2.75 கோடி பேர் பயணம் செய்யும் ரயில்வேக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தினமும் 3 லட்சம் பேர் பயணிக்கும் சென்னை மெட்ரோ ரயிலுக்கு தமிழக அரசு ரூ.35 ஆயிரம் கோடி வழங்குகிறது. தினமும் 1.75 கோடி பேர் பயணம் செய்யும் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு நாங்கள் ரூ.7500 கோடி இழப்புத்தொகை தான் கேட்கிறோம். அரசு ரூ.1500 கோடி தான் வழங்கியுள்ளது. தமிழக அரசின் மொத்த கடன் 8 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.2024 ல் மட்டும் 1 லட்சம் கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளனர். கடனோடு, கடனாகபெற்று போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் வழங்க தமிழகஅரசு முன் வர வேண்டும். மின் வாரியத்திற்கு கடன் பெற்று வழங்கிய அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு மட்டும் வஞ்சனை செய்வது ஏன். இதனை கேட்டு ஜன.,22ல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
18-Jan-2025