வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய அரசூரணி நடை பாதை நடைபயிற்சி மேற்கொள்வோர் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி கரை நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் பொதுமக்கள் பயனடையும் வகையிலும், ஊருணி நீரை பாதுகாக்கும் வகையிலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அரசூரணி குளத்தை சுற்றிலும் பல லட்சம் மதிப்பீட்டில் வேலி அமைக்கப்பட்டு ஊருணியைச் சுற்றிலும் பேவர் பிளாக் மூலம் நடைபாதை அமைக்கப்பட்டது.இதன் மூலம் காலை, மாலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேவர் பிளாக் பதிக்கப்பட்ட நடைபாதையில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவது அதிகரித்துள்ளது.இதனால் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள, நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து ஜவகருல்லா கூறுகையில், நடை பயிற்சிக்கு என அமைக்கப்பட்ட பேவர் பிளாக் பாதையில் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன போக்குவரத்து அதிகமுள்ள மெயின் ரோடுகளில் தினமும் அச்சத்துடன் நடை பயிற்சி மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.