உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அனைத்து ஊராட்சிகளிலும் நவ.23ல் கிராம சபை கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் நவ.23ல் கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம் ; ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நவ.23ல் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:நவ.1 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கிராம சபைக் கூட்டம் நவ.23ல் காலை 11:00 மணிக்கு அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது.இதில் ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஜல்-ஜீவன் குடிநீர் திட்டம், துாய்மை பாரத இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும். கூட்டத்தில் கிராம மக்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி