உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிரிமியங்களுக்கு ஜி.எஸ்.டி., நீக்க எல்.ஐ.சி., முகவர்கள் கோரிக்கை

பிரிமியங்களுக்கு ஜி.எஸ்.டி., நீக்க எல்.ஐ.சி., முகவர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் : எல்.ஐ.சி., பிரிமியங்களுக்கு ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என முகவர்கள் வலியுறுத்தினர். ராமநாதபுரத்தில் எல்.ஐ.சி., லிகாய் முகவர் சங்கம் சார்பில் கிளை அலுவலக வளாகத்தில் கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது. மதுரை கோட்ட செயல் தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். முகவர்களின் குழு காப்பீடு அதிக பட்சம் வயது நிர்ணயத்தை நீக்க வேண்டும். எல்.ஐ.சி., பிரிமியங்களுக்கு ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும். பாலிசி சேவைகளுக்கு அனைத்து கிளைகளிலும் ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டp.ராமநாதபுரம் மாவட்ட செயல் தலைவர் வையச்சாமி, கிளை தலைவர் சண்முகநாதன், பொதுச்செயலாளர் கர்ணன், நிர்வாகி கணபதி, உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொருளாளர் அழகேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை