உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை முதல் அக்.17 வரை கைத்தறிக் கண்காட்சி

நாளை முதல் அக்.17 வரை கைத்தறிக் கண்காட்சி

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் உள்ள பரக்கத் மகாலில் அக்.,4 (நாளை) முதல் 17 வரை மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை அக்.,4ல் கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி துவக்கி வைக்க உள்ளார். இதில், காஷ்மீரி சால்வைகள், ஹரியானா பெட்ஷீட்கள், மீரட் போர்வைகள், பரமக்குடி பம்பர் காட்டன் சேலைகள், 1000 புட்டா சேலைகள், ஈரோடு, கரூர் பெட்சீட்டுகள் உள் ளிட்டவை இடம் பெறுகின்றன. தமிழ்நாட்டு பருத்தி ரகங்களுக்கு 30 சத வீதம் (அதிகபட்சம் ரூ.150 வரை) பட்டு ரகங்களுக்கு ரூ.300 ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. அனுமதி இலவசம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி