உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் வேலை நிறுத்தம்

 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் வேலை நிறுத்தம்

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினர் கைத்தறி உதவி இயக்குனரை மாற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பரமக்குடியில் 82 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது. இதில் பல ஆயிரம் தொழிலாளர்கள் சச்சா பொருட்களை பெற்று தொழில் செய்கின்றனர். தொடர்ந்து அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களின் பெடரேசன் மற்றும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனராக பணியாற்றும் சேரன் தனது பொறுப்பை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். இதனால் நெசவாளர்கள், பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு களங்கம் உண்டாக்கும் இவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சென்னை கைத்தறி துறை இயக்குனருக்கு மனு அனுப்பினர். இதேபோல் எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பெடரேசன் செயலாளர்கள் கோதண்டராமன், ருக்மாங்கதன், துணைத் தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் கணேஷ் பாபு, நிர்வாகி முரளி, பணியாளர் சங்க தலைவர் ஜோதி கிருஷ்ணன், செயலாளர் கண்ணன், ஆலோசகர் கங்காதரன், தி.மு.க., நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் சந்திரசேகரன், கோவிந்தன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை