உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார்த்திகை பட்டத்தில் விதைத்த எள் அறுவடை

கார்த்திகை பட்டத்தில் விதைத்த எள் அறுவடை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கார்த்திகை பட்டத்தில் விதைத்த எள் மகசூல் நிலையை அடைந்ததால் விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான செங்குடி, சீனாங்குடி, சேத்திடல், எட்டியத்திடல், முத்துப்பட்டினம், பூலாங்குடி, வரவணி, கூட்டாம்புளி, வண்டல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படாத நிலங்களில் கார்த்திகை மாதத்தில் விவசாயிகள் எள் விதைப்பு செய்தனர். இந்நிலையில் கார்த்திகை மாத பட்டத்தில் விதைப்பு செய்யப்பட்ட எள் மகசூல் நிலையை தற்போது எட்டியதை தொடர்ந்து விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்யப்படும் விளைந்த எள் செடிகளை மொத்தமாக குவித்து வைத்து எட்டு நாட்களுக்கு பிறகு அதை வெயிலில் உலர்த்தி எள்ளை பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.பெரும்பாலான விவசாயிகள் மகசூல் அடைந்த எள்ளை தரம் பிரித்து தங்கள் வீட்டுக்கு தேவையான நல்லெண்ணெய்யை செக்கில் ஆட்டி பயன்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை