உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஹைட்ரோ கார்பன்: எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் மனு

ஹைட்ரோ கார்பன்: எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் மனு

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் பகுதிக்கு உட்பட்ட சீனாங்குடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான ஆயத்த பணிகள் துவங்கின. அதைத் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமையில் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் செயல்படுத்த தடை விதிக்க வலியுறுத்தி தாசில்தார் ராமமூர்த்தி யிடம் மனு அளித்தனர். காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தனபாலன், துணைத் தலைவர் அப்துல் ரஹீம், கிராமத்தார்கள் ரமேஷ் குமார், சங்கர், தேசிங்கு ராஜன், தர்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி