உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடியில் அனுமதியி்ன்றி வெட்டி அழிக்கப்படும் பனை மரங்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

சாயல்குடியில் அனுமதியி்ன்றி வெட்டி அழிக்கப்படும் பனை மரங்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

சாயல்குடி: -கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மாரியூர் உள்ளிட்ட இடங்களில் முறையான அனுமதி இன்றி வெட்டி அழிக்கப்படும் பனை மரங்களால் அதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.சாயல்குடி, அதைசுற்றியுள்ள செவல்பட்டி, தரைக்குடி, உரைகிணறு, காவாகுளம், பூப்பாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான பனைரங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான பனைத் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. பனை மரத்திலிருந்து பதநீர், கருப்பட்டி மற்றும் குருத்து ஓலைகளில் இருந்து கலைநய உற்பத்தி பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயன் தரும் நிலையில் 40 முதல் 80 ஆண்டுகளுக்கு முற்பட்ட பனை மரங்களே தற்பொழுது பயன் தந்து வருகிறது. புதியதாக பனை விதைகள் நட்டு வளர்த்து வரும் நிலை வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் மன்னார் வளைகுடா கடற்கரையோரப் பகுதியில் உள்ள பனை மரங்களை விளைநிலங்களுக்காக வெட்டி அழிக்கும் போக்கு தொடர்கிறது.சாயல்குடி வி.வி.ஆர்.,நகரைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ராஜபாண்டியன் கூறியதாவது: சாயல்குடி தயாரிக்கும் கருப்பட்டிகள் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு செல்கிறது. அனுமதியின்றி பனைமரம் வெட்டுவது இது குறித்து கடலாடி வருவாய் ஆய்வாளர் வழியாக சாயல்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ளோம். எனவே மாவட்டம் நிர்வாகம் பனை மரத்தை அழிவில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ