உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 52 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பரமக்குடியில் பணியிடை பயிற்சி

52 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பரமக்குடியில் பணியிடை பயிற்சி

பரமக்குடி : -பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் ராமநாதபுரம் மாவட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி நடந்தது.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், அரசு கலைக்கல்லுாரி இணைந்து நடத்தும் இந்த முகாம் ஐந்து நாட்கள் நடக்க உள்ளது. கல்லுாரி முதல்வர் மேகலா தலைமை வகித்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அறிவழகன் வரவேற்றார். பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் முருகம்மாள் பயிற்சியை துவக்கி வைத்தார்.கமுதி வட்டார கல்வி அலுவலர் சண்முகம், பேராசிரியர் கணேசன் பேசினர். துறைத் தலைவர்கள் ஆஷா, ரேணுகா தேவி, கண்ணன், மும்தாஜ் பேகம், தினேஷ் பாபு, விஜயகுமார், ரமேஷ், மோகன கிருஷ்ணவேணி பங்கேற்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் 52 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ