உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் தலையிடு அதிகரிப்பு

சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் தலையிடு அதிகரிப்பு

சாயல்குடி : சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் தலையிடு அதிகளவு உள்ளது கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.நரிப்பையூர், கன்னிராஜபுரம், செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, இலந்தை குளம், மூக்கையூர் மற்றும் சாயல்குடி நகர் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு சாயல்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.கடலாடி ஒன்றியக் குழு துணை தலைவர் ஆத்தி: சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிகளவு புரோக்கர்கள் தலையீடு உள்ளது. இதனால் உரிமை இல்லாத நபர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வீட்டு மனைகளாக பிரித்து ஏமாற்றி விற்பனை செய்கின்றனர். பாதிப்பை சந்திக்கும் பயனாளிகள் போலீசில் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இடையூறு ஏற்படுத்தும் புரோக்கர்களின் தலையீட்டை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை