உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடியில் பிளாஸ்டிக் கவர்களில் டீ பார்சல் செய்யும் போக்கு அதிகரிப்பு: கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை

சாயல்குடியில் பிளாஸ்டிக் கவர்களில் டீ பார்சல் செய்யும் போக்கு அதிகரிப்பு: கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை

சாயல்குடி: சாயல்குடி நகர் பகுதிகளில் அதிகளவு டீக்கடைகளில் பிளாஸ்டிக் கவரில் டீ மற்றும் காபி, பால் உள்ளிட்டவைகளை சூடாக பார்சல் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. உணவு பாதுகாப்பு துறையினர் கண்டு கொள்வதில்லை. சாயல்குடி நகர் பகுதிகளில் உள்ள டீக்கடை, ஓட்டல்களில் சூடாக டீ மற்றும் சாம்பார், ரசம், மீன் குழம்பு போன்றவை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். சாயல்குடியைச் சேர்ந்த தன்னார்வலர் பாஸ்கரன் கூறியதாவது: சூடாக டீ உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து தரும் போது அவற்றில் வேதிவினை மாற்றங்கள் ஏற்படுகிறது. உடலுக்கு ஒவ்வாமை மற்றும் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகளால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படும். இதே போல ஓட்டல்களில் வாழை இலைக்கு பதில் பச்சை நிற பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்துகின்றனர். போண்டா, வடை உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை பார்சல் செய்வதற்கு செய்தித்தாள்களை பயன் படுத்துவதால் அவற்றில் உள்ள காரீயம் தின்பண்டங்களில் அதிகளவு படிந்து விடுகிறது. எனவே மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உரிய முறையில் கடை களுக்கு விழிப்புணர்வு வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை