மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
மதுரை, : தொண்டியை சேர்ந்த கலந்தர் ஆசிக் அகமது உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:ராமநாதபுரம்- ராமேஸ்வரம் ரோட்டில் பெருங்குளம் ஊராட்சி செம்படையார்குளம் அருகே டோல்கேட் உள்ளது. அது பயனற்று இடிந்து விழும் நிலையில் உள்ளது.இரும்பு கம்பிகள், துாண்கள் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் நீட்டிக் கொண்டிருக்கின்றன.வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடக்கின்றனர். டோல்கேட்டை அகற்றக்கோரி தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலர், ராமநாதபுரம் கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிபிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பில் டோல்கேட் அகற்றப்படும் என தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago