உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாத்தமங்கலம் ஊருணியில் வேலி அமைக்க வலியுறுத்தல்

சாத்தமங்கலம் ஊருணியில் வேலி அமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் குடிநீர் ஊருணியை சுற்றி வேலி அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தமங்கலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஊருணியில் தேங்கும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.இந்த குடிநீர் ஊருணி திறந்த நிலையில் உள்ளதால் கால்நடைகள் ஊருணி நீரை அசுத்தம் செய்யும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திறந்த நிலையில் உள்ள ஊருணி நீரை பாதுகாக்கும் விதமாக சுற்றிலும் முள்வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை