மேலும் செய்திகள்
கால்நடைகள் பாதிப்பு
24-May-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் மீன் மார்க்கெட் அமைக்கும் பட்சத்தில், பொதுமக்களும் ஒரே இடத்தில் பல வகையான மீன்களை மக்கள் வாங்கிட முடியும்.ஆர்.எஸ்.மங்கலத்தில், மீனவர்கள் மீன்கள் விற்பனை செய்வதற்கான, முறையான மீன் மார்க்கெட் இல்லாததன் காரணமாக, டி.டி. மெயின் ரோடு, பரம்ரை ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதி உள்ளிட்ட இடங்களில் ரோட்டோரங்களில் அமர்ந்து மீன் விற்பனை செய்கின்றனர். கடற்கரை கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை மீனவர்கள் விற்பனை செய்வதற்கு முறையான இட வசதி இல்லாததால், மீனவ பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் மீன் மார்க்கெட் அமைக்கும் பட்சத்தில், பொதுமக்களும் ஒரே இடத்தில் பல வகையான மீன்களை வாங்கி பயனடையும் நிலை ஏற்படும். எனவே மீன் மார்க்கெட் அமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
24-May-2025