உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி பேரூராட்சியில் புதிய பல்புகள் பொருத்தும் பணி

கமுதி பேரூராட்சியில் புதிய பல்புகள் பொருத்தும் பணி

கமுதி; கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் உள்ள மின்கம்பத்தில் உள்ள பழைய பல்புகளை அகற்றிவிட்டு புதிதாக எல்.இ.டி., பல்புகள் பொருத்தும் பணி நடக்கிறது.கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது.இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தெருக்களில் மின்கம்பத்தில் உள்ள பழைய பல்புகளை அகற்றிவிட்டு புதிய பல்புகள் பொருத்தும் பணி நடக்கிறது. பணியை கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி நேரில் ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது:கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் உள்ள மின்கம்பத்தில் உள்ள பழைய பல்புகளை அகற்றிவிட்டு புதிய பல்பு பொருத்தும் பணி நடக்கிறது. பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட எல்.இ.டி., பல்புகள் மாற்றப்பட உள்ளது என்றார். உடன் கவுன்சிலர் போஸ் செல்வா உட்பட பேரூராட்சி பணியாளர்கள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை