மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் மனு அளிக்கும் போராட்டம்
17-Jun-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் நஜ்முதீன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் குலசேகரன் முன்னிலை வகித்தனர். கல்வி, சுகாதாரத்துறைக்கான நிதியை தேவைக்கேற்ப மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி சங்கம் மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணா, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் மாரிச்சாமி, கணக்கு கருவூலகத்துறை மாவட்ட செயலாளர் ஜெனீஸ்டர் பங்கேற்றனர்.* இதே போன்று காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் கிளை எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத்தலைவர் முத்துபாண்டி தலைமை வகித்தார். எல்.ஐ.சி.,யில் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். இன்சூரன்ஸ் திட்டங்களை திருத்தக்கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என கோஷமிட்டனர். கிளைச் செயலாளர் வெயில்முத்து, பொறுப்பாளர் சுல்தான் பாட்ஷா பங்கேற்றனர்.
17-Jun-2025