உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வக்ப் சட்டத்திருத்தத்தை கண்டித்து  ஜமாத்துல் உலமா சபை ஆர்ப்பாட்டம்  

வக்ப் சட்டத்திருத்தத்தை கண்டித்து  ஜமாத்துல் உலமா சபை ஆர்ப்பாட்டம்  

ராமநாதபுரம்: -வக்ப் சட்டதிருத்தத்தை கண்டித்து, ராமநாதபுரத்தில் ஜமாத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடந்தது.ராமநாதபுரம் சந்தை திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் முகமதுஜலாலுதீன் அன்வாரி தலைமை வகித்தார். புதுமடம் நடுத்தெரு இமாம் பரகத் அலி சதகீ, செயலாளர் ஜலாலுதீன், ராமநாதபுரம் வட்டாரத்தலைவர் முகமது ரபீக் உலவி உட்பட பலர் பங்கேற்றனர். மாநில பொதுச்செயலாளர் அன்வர் பாதுஷா கண்டன உரையாற்றினார். த.மு.மு.க., பொதுச்செயலாளர் ஹாஜாகனி, மாவட்ட அரசு தலைமை ஹாஜி ஸலாஹீத்தீன் ஜமாலி, எஸ்.டி.பி.ஐ., மாநில பொது செயலாளர் நிஜாம்முகைதீன், மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான், ஐ.மு.மு.க., மாநில செயலாளர் அன்வர் அலி பங்கேற்றனர். முன்னதாக அனைவரும் அலைபேசியில் 'டார்ச்லைட்' அடித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை