உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளின் கூட்டு முயற்சி

கீழக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளின் கூட்டு முயற்சி

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள்மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இது குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இடங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை அளவீடு செய்து அறிக்கை அனுப்பி வைக்குமாறு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் கிடைக்கப்பெற்றது.இதனடிப்படையில் கீழக்கரை வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட், ஹிந்து பஜார், முஸ்லிம் பஜார் பகுதியில் அதிகம் உள்ள பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை