மேலும் செய்திகள்
தன்னார்வலர் நேர்காணல்
30-Oct-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருவாடனை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் வழிகாட்டுதலில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளர் சார்பு நீதிபதி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் ஆண்டனி ரிஷந்தேவ் முன்னிலை வகித்தார். முகாமில் பள்ளி மாணவர்களுக்கு சட்டரீதியான பிரச்னைகளை கையாளும் வழிமுறைகள் குறித்தும், இலவச சட்ட உதவிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் பகவதி குமார், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மகாலட்சுமி, ஆசிரியர்கள் வன்மீகநாதன், சிலம்பரசன், ரவிச்சந்திரன், மூத்த வழக்கறிஞர் தனபால், சட்ட தன்னார்வலர்கள் கோட்டைச்சாமி, ராமராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
30-Oct-2025