உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / யாசகம் பெற்ற பணத்தை பிரிப்பதில் தகராறு நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள்

யாசகம் பெற்ற பணத்தை பிரிப்பதில் தகராறு நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் யாசகம் பெற்ற பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்தவருக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 56. இவர் மதுரை கீழவாசல் பகுதியை சேர்ந்த சுதாவை திருமணம் செய்தார். மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில் முத்துக்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். பிறகு மனைவியுடன் தகராறு ஏற்பட்டு அவரை பிரிந்து வந்து ராமநாதபுரம் அரண்மனைப்பகுதி மதுக்கடையில் வேலை செய்து வந்தார்.கொரோனா நேரத்தில் மதுக்கடைகளை மூடியதால் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் வாசலில் அமர்ந்து யாசகம் பெற்று வந்துள்ளார். அப்போது துாத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்ற சாதிக்குடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக யாசகம் பெற்று அதில் சேரும் பணத்தை பிரித்து கொண்டனர். 2022 ஆக., 30 ல் யாசகம் பெற்ற பணத்தை பங்கு பிரிப்பதில் துரைப்பாண்டி, முத்துக்குமார் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் துரைப்பாண்டி பீர் பாட்டிலால் முத்துக்குமார் தலையில் அடித்தார். இதில் காயமடைந்தவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டவர் இறந்தார். முத்துக்குமார் மனைவி சுதா புகாரில் பஜார் போலீசார் விசாரித்து துரைப்பாண்டியை கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. துரைப்பாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மெகபூப் அலிகான் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் மாவட்ட அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி