உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்நடை இனப்பெருக்க மேலாண்மை கருத்தரங்கு

கால்நடை இனப்பெருக்க மேலாண்மை கருத்தரங்கு

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூரில் மத்திய அரசின் ராஷ்டீரிய கோகுல் திட்டத்தில் கால்நடை இனப்பெருக்க மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி இணைந்து நடத்திய முகாமிற்கு நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் இசக்கியேல் நெப்போலியன், பழனிச்சாமி, ராமநாதபுரம் மண்டல கால்நடை இணை இயக்குனர் இளங்கோ, உதவி இயக்குனர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு கால்நடை நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் கால்நடை உதவி மருத்துவர் மனிஷா, கால்நடை ஆய்வாளர் எழில் வேந்தன், ஊராட்சி தலைவர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை