மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம்
17 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (19.11.2025)
19 minutes ago
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
19 minutes ago
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
22 minutes ago
ஆர்.எஸ்.மங்கலம்: சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் போதிய மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில் செப்., கடைசி வாரத்தில் பருவ மழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டது. அதன் பின் பெய்த மழைக்கு நெற்பயிர்கள் முளைத்தன. ஆர். எஸ்.மங்கலம், திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் முளைத்த நேரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் நெல் வயலில் தேங்கியிருந்த மழை நீரை விவசாயிகள் வெளியேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதன் பின் ஒரு மாதத்திற்கும் மேலாக பருவமழை ஏமாற்றியதால் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் போதிய மழைப்பொழிவு கிடைக்கும் என நெல் சாகுபடி விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆர். எஸ்.மங்கலம், திருவாடானை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கருமேகக் கூட்டங்கள் இருந்தும் அவ்வப்போது லேசான துாறல் மழையுடன் கடந்து செல்கின்றன. காற்றழுத்த தாழ்வு நிலையால், நெல் வயல்களில் தண்ணீர் தேங்கும் என எதிர்பார்ப்பில் காத்திருந்த விவசாயிகள் பருவமழை கை கொடுக்காததால் உரமிடுதல், போதிய தண்ணீரை தேக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் நவ.,22-ல் புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையிலாவது மாவட்ட விவசாயிகளுக்கு போதிய மழை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
17 minutes ago
19 minutes ago
19 minutes ago
22 minutes ago