மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
10 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
10 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
10 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
10 hour(s) ago
திருவாடானை : திருவெற்றியூரில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மீது வைக்கோல் லாரி உரசி தீப்பிடிக்கும் சம்பவத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழ்செய்தி எதிரொலியாக மின்கம்பிகள் உயர்த்தி அமைக்கப்பட்டது. திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடைப் பணிகள் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட வைக்கோலை கட்டுகளாக கட்டி விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் கால்நடை தீவனத்திற்காக கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர்.இந்த வைக்கோல் கட்டுகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மீது உரசுவதால் தீப்பிடித்து எரிகிறது. சில நாட்களுக்கு முன்பு திருவெற்றியூரில் ஏற்பட்ட விபத்தில் வைக்கோல் கட்டுகள் சாலையில் சிதறி எரிந்ததால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருவெற்றியூர் கவாஸ்கர் கூறுகையில், திருவெற்றியூரில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைப்பதற்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளாகியும் அதற்கான பணிகள் நடைபெறவில்லை. லாரியில் தீப்பிடித்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர் என்றார்.இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக இரண்டு நாட்களாக மின்கம்பிகளை உயர்த்தி அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் திருவெற்றியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நிம்மதிஅடைந்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago