உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொலை வழக்கில் கைதான நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு 

கொலை வழக்கில் கைதான நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இளைஞரை கொலை செய்து கடலில் வீசிய வழக்கில் கைதான முகமது அனஸ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மே 17 ல் திருப்புல்லாணி நாடார் குடியிருப்பு கடற்கரையில் ராமநாதபுரம் சின்னக்கடை தெருவைச் சேர்ந்த கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா 21, உடல் ஒதுங்கியது.திருப்புல்லாணி போலீசார் விசாரணையில் செய்யது அப்துல்லா வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றியதால் இவரை மர்ம நபர்கள் கொலை செய்து கடலில் வீசியது தெரிய வந்தது.இவ்வழக்கில் ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியை சேர்ந்த முகமது அனஸ் 32, வெற்றிலைக்கார தெரு முகமது ஷாரூக்கான் 26, வடக்குத்தெரு சிவபிரசாத் 26, அழகன்குளம் லியாகத் அலி 68, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையின் பேரில் முகமது அனஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட முகமது அனஸ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி