உள்ளூர் செய்திகள்

மண்டலாபிஷேக விழா

கீழக்கரை: -கீழக்கரை செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் காஞ்சிரங்குடி பஸ் ஸ்டாப் அருகே செந்தில் முருகன் கோயில் உள்ளது.காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட வேல் வழிபாட்டில் இருந்து வந்தது.இங்கு கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 10ல் நடந்தது. 48 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நேற்று காலை கும்ப பூஜை உள்ளிட்ட வேள்விகள் நடந்தது. மூலவருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இளைஞர் கொல்தச்சு தொழிலாளர் சங்கத்தினர், விஸ்வகர்மா இளைஞர் பாசறையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ