உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரெணபலி முருகன் கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

ரெணபலி முருகன் கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

ராமநாதபுரம், : ராமநாதபுரம் அருகே பெருவயல் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயிலில் மாசித்திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில்மாசி மக உற்ஸவ விழா பிப்.13ல் தேங்காய் தொடல், காளியூட்டம் சிறப்பு பூஜைகளுடன் துவங்கி பிப்.25 வரை நடக்கிறது. தினமும் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி காலையில் பல்லக்கிலும், இரவு அன்னம், மேஷம், பூதம், யானை, மயில் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (பிப்.24) காலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிேஷகம் செய்து மலர் அலங்காரத்தில் தேரேற்றம் செய்து காலை 10:30 மணிக்கு ஊரின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இன்று (பிப்.25) தீர்த்தவாரியுடன் இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி உலாவுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி