உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் மருத்துவ முகாம்

பரமக்குடியில் மருத்துவ முகாம்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு முழுஉடல்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாற்று திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு என்பதை கண்டறிந்து தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், பரமக்குடி சுகாதார அலுவலர் லட்சுமி நாராயணன், மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜுன் குமார், இணை இயக்குனர் பிரகலாதன், பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணை தலைவர் குணா, வட்டார மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி