உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

ராமநாதபுரம்: பள்ளிக்கல்வித்துறை, ராமநாதபுரம் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் வள்ளல் பாரி நகராட்சி பள்ளியில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் கணேச பாண்டியன் துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கர்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவண,ன் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் (பொ) ேஷாபனா, கல்வி அலுவலர்கள் தமிழரசி, சூசை பங்கேற்றனர். மனநலம், காது, மூக்கு, எலும்பு பிரிவு மருத்துவர்கள் பரிசோதனை செய்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் இந்த முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை