மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
9 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
9 hour(s) ago
ராமநாதபுரம்: '' தற்போது பாதி கிணறு தான் தாண்டியுள்ளோம். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் தான் முழு கிணற்றை தாண்டியதாக அர்த்தம்'' என அமைச்சர் உதயநிதி பேசினார்.ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடந்த தி.மு.க., லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது: சேலத்தில் நடந்த கட்சியின் இளைஞர் அணி மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். அது நமக்கு கிடைத்த 50 சதவீதம் வெற்றி தான். தற்போது பாதி கிணறு தான் தாண்டியுள்ளோம். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் தான் முழு கிணற்றை தாண்டியதாக அர்த்தம்.மத்திய அரசு நமது மொழி உள்ளிட்ட உரிமைகளை பறிக்கிறது. ஹிந்தியை திணிக்கிறது. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நமது குழந்தைகள் படிக்காமல் இருக்க அத்தனை வேலைகளையும் செய்து வருகிறது. நிதியுரிமையும் பறிக்கப்படுகிறது. நாம் வரியாக 6 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கொடுத்துள்ளோம். அவர்கள் நமக்கு கொடுத்தது 1.50 லட்சம் கோடி. நாம் ஒரு ரூபாய் கட்டினால் 28 காசுகள் வழங்குகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் 2 முதல் 3 ரூபாய் வரை மும்மடங்கு அதிகரித்து வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
உதயநிதி பேசுகையில்,' தமிழகத்தை பூட்டு என்றும், பா.ஜ., வை சுத்தியல் என்றும், தி.மு.க., வை சாவி என்றும் சித்தரித்து கதை சொன்னார். தமிழக மக்கள் பூட்டு என்பதற்கு பதிலாக பா.ஜ., பூட்டு என்றவர் திருத்தி பின்னர் பா.ஜ., சுத்தியல் என்றார்.ஒரு பூட்டை சுத்தியல் பல முறை அடித்து திறக்க முயன்றது. பூட்டு திறக்கவில்லை. சாவியை வைத்து மிக எளிதாக பூட்டு திறக்கப்பட்டது. நான் பல முறை அடித்தும் பூட்டு திறக்கவில்லை. சாவி போட்டவுடன் திறந்து விட்டதே என சுத்தியல் கேட்டதாம்.அதற்கு சாவி, நீயோ பூட்டின் தலையில் அடித்தாய். நான் பூட்டின் இதயத்தில் தொட்டேன் திறந்து விட்டது.அந்த பூட்டு தான் தமிழக மக்கள். அவர்கள் இதயத்தை தொட்ட சாவி தி.மு.க., என்றார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago