உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றம் எப்போது சட்டசபையில் எம்.எல்.ஏ., கேள்வி

பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றம் எப்போது சட்டசபையில் எம்.எல்.ஏ., கேள்வி

பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என முருகேசன் எம்.எல்.ஏ., சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். இதன்படி திட்டம் குறித்த விளக்கத்தை கேட்டு சட்டசபையில் பேசினேன். அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறியதாவது:ஒவ்வொரு நகராட்சியிலும் மக்கள் தொகை அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுகிறது. ஆகவே பரமக்குடியில் மக்கள் தொகை அதிகம் இருக்குமானால் அதன் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். தொடர்ந்து சட்டசபைக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து வகையான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ