உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா

புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா

திருப்புல்லாணி; - திருப்புல்லாணி சாலைத்தெருவில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டு தலுடன் விழா துவங்கியது. தினந்தோறும் அம்மன் கரகத்திற்கு முன்பாக இரவில் ஆண் களின் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடந்தது. நேற்று மாலை மூலவர்கள் விநாயகர், பாலமுருகன், புல்லாணி மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து, மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவில் சக்தி கரகம் மற்றும் முளைப்பாரி வீதி உலா நடந்தது. இன்று முளைக்கொட்டு உற்ஸவத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டும், நேர்த்திக்கடன் பூஜைகளை செய்கின்றனர். மதியம் அன்னதானமும் மாலை 4:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ