உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நாகூர் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு விழா

 நாகூர் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு விழா

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காக்கூரில் நாகூர் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு விழா நடந்தது. அனைத்து சமுதாய மக்கள் இணைந்து மனிதநேய மத நல்லிணக்க விழாவாக கடந்த பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நத்தப்படுகிறது. கடந்த வாரம் சந்தன செம்பு வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடியேற்றம் நடந்தது. நேற்று கதையன் கிராமத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தனக் செம்பு வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக தர்ஹாவை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது அனைத்து மதத்தினரும் மலர்கள் கொடுத்து வழிபட்டனர். முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ