தேசிய திறனாய்வு தேர்வு திருப்புல்லாணியில் அதிக ேதர்ச்சி
ராமநாதபுரம்: -மாவட்டத்தில் திருப்புல்லாணி ஒன்றியத்தில் 150 மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் திருப்புல்லாணி ஒன்றியத்தில் மட்டும் அதிகளவில் 150 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வென்ற மாணவர்கள், அதற்கு காரணமாக இருந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களை ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெபா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி ஆகியோர் பாராட்டினர்.