உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் பா.ஜ. சார்பில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியையொட்டி ராணுவ வீரர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது.ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை பெற்றுக் கொடுத்த ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதுகுளத்துாரில் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது. முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகம் அருகே துவங்கி முக்கிய வீதிகள் வழியாக காந்தி சிலையில் நிறைவடைந்தது.பா.ஜ., மாநில இளைஞரணி செயலாளர் ராம்குமார் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை