மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி
29-Jul-2025
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் அரசு பள்ளியில் தேசிய நுாலகர் தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய நுாலகர் தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பாம்பன் சின்னபாலம் மீனவர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பாம்பன் கிளை நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் செல்லம்மாள், ஆசிரியர் லியோன், வாசகர் வட்ட தலைவர் முத்துவாப்பா பரிசு வழங்கி பாராட்டினர். பின் நுாலக தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் உருவப்படத்திற்கு வாசகர் வட்டத்தினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பாம்பன் கிளை நுாலகர் ரிசாலத் அலி செய்திருந்தார். வாசகர் வட்ட பொறுப்பாளர் பிரசன்னா நன்றி கூறினார்.
29-Jul-2025