உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஒன்பது இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் திட்டம்

 ஒன்பது இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் திட்டம்

திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் 9 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் குறைவழுத்த மின்சாரத்தால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 9 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இது குறித்து திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி கூறியதாவது: மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மின் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய திருவாடானை, தொண்டி பகுதியில் 9 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொண்டியில் 2 இடங்களிலும், மருதவயல், எஸ்.பி.பட்டினம் கிழக்கு தெரு, பி.வி.பட்டினம், நம்புதாளை பள்ளி வாசல் பின்புறம், தாமோதரபட்டினம் மீனவ குடியிருப்பு, அரசப்பன் குடி யிருப்பு ஆகிய இடங்களில் புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும். சோழகன் பேட்டையில் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கணேசன் தலைமையில் கள ஆய்வு பணிகள் நடந்தது. விரைவில் பணிகள் முடிந்து மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ