மேலும் செய்திகள்
முளைப்பாரி விழா
01-Aug-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து அன்னதானம் நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாடக்கோட்டையில் பிரசித்தி பெற்ற முனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை திருவிழாவும், ஆண்டு தோறும் ஆடி பூஜை கிடாய் வெட்டு விழாவும் நடைபெறுகிறது. நேற்று ஆடி பூஜை கிடாய் வெட்டு நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய நுாறுக்கும் மேற்பட்ட கிடாய்கள் கோயில் முன்பு பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி கருப்பத்தேவர், சென்னை மாநகராட்சி நிலைக் குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் தனசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
01-Aug-2025