உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிரேத பரிசோதனை அறையில் குளிர்சாதனம்  பழுதால்  துர்நாற்றம் 

பிரேத பரிசோதனை அறையில் குளிர்சாதனம்  பழுதால்  துர்நாற்றம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் குளிர் சாதனங்கள் பழுதடைந்துள்ளதால் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடம் புதிய கட்டடம் கட்டப்பட்டும் இன்னும் பழைய கட்டடத்தில் தான் செயல்பட்டு வருகிறது. இதில் உடல்கள் வைப்பதற்காக 9 உறைகள் உள்ளன. இவை அனைத்தும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.தற்போது குளிர் சாதனங்கள் பழுதடைந்துள்ளதால் இந்த உறைகளில் வைக்கப்படும் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. தினமும் குறைந்த பட்சம் இரு உடல்கள் பிரேத பரிசோதனை நடக்கும். இங்கு முதல் நாள் இரவே விபத்து, விஷம், துாக்கு போன்றவற்றில் இறந்தவர்களின் உடல்களில் பிணவறையில் வைக்கப்படுகின்றன.இவை அனைத்தும் மறுநாள் தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அப்படி ஒப்படைக்கும் போது துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். பிரேத பரிசோதனை அறையில் உள்ள குளிர் சாதனங்கள் பழுதால் உடல்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படுகிறது.மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பிரேத பரிசோதனை அறையில் குளிர் சாதனங்கள் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை