| ADDED : ஜன 19, 2024 04:38 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பஸ்ஸ்டாண்ட் கழிப்பறை செப்டிக் டேங்கில் இருந்து வீசும் கடும் துர்நாற்றத்தால் பயணிகள் தவிக்கின்றனர்.நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் திகழ்வதால் ஆர்.எஸ்.மங்கலம் பஸ்ஸ்டாண்டிற்கு தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.மேலும் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங் களுக்கு பஸ் போக்குவரத்து உள்ளதால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை செப்டி டேங்க் நிறைந்ததும் அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செப்டிக் டேங்க் கழிவு நீர் ரோட்டில் கசிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.இதனால் அவ்வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகனங்களும் செப்டிக் டேங்கில் இருந்து வெளிவரும் கழிவு நீரை கடந்து செல்ல வேண்டியுள்ளது. துர்நாற்றத்தால் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களும், பயணிகளும் தொற்றுநோய் அச்சத்தில் வந்து செல்லும் நிலை உள்ளது.எனவே, பேரூராட்சி நிர்வாகம் கட்டண கழிப்பறை செப்டிக் டேங்க் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.