உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை - அன்பு நகர் செல்லும் வழியில் குப்பையால் மக்கள் அவதி

கீழக்கரை - அன்பு நகர் செல்லும் வழியில் குப்பையால் மக்கள் அவதி

கீழக்கரை : கீழக்கரை அன்பு நகரிலிருந்து கோகுலம் நகர் செல்லும் வழியில் சாலையோரங்களில் அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக் கேட்டால் மக்கள் சிரமப்படுகின்றனர். கீழக்கரை ஹிந்துக்கள் மயான பகுதியில் சாலையோரத்தில் அதிகளவு மக்காத குப்பையை கொட்டி செல்லும் போக்கு தொடர்கிறது. அப்பகுதியில் முகம் சுளிக்கும் அளவிற்கு உள்ளது. கழிவுநீர் உள்ளிட்டவைகளை கொட்டும் குப்பை மேடாகியுள்ளது. மயான பகுதியில் இறுதிச்சடங்கு செய்வோர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் குப்பையை அகற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த குப்பைத் தொட்டிகளை பழுது நீக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்