மேலும் செய்திகள்
அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
14-Sep-2024
ராமநாதபுரம்: செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் இனிய தமிழ்சங்கம் மற்றும் கலை இலக்கிய மன்றம் இணைந்து ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா துவக்கி வைத்தார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. கேரள பாரம்பரிய சமையல், அத்தப்பூ கோலம், கயிறு இழுத்தல் போட்டிகள், ஆசிரியைகளுக்கான பூக்கட்டுதல், மாணவர்கள் பங்கேற்ற உறியடி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கேரள மாநில உடையணிந்து விழாவில் பங்கேற்றனர். இது போன்ற விழாக்கள் இன்றைய தலைமுறையினருக்கு ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த எடுத்துக்காட்டாக அமைந்தது. ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை பேராசிரியை ஆர்.கவிதா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
14-Sep-2024